59. பூணூலு காலம் – Poonoolu Kalam

வேறு பெயர்கள் :
1. பூனூல் வர்மம் (வர்ம பீரங்கி-100)

பெயர்க்காரணம் :
உடலின் குறுக்கே போட்டுக் கொள்ளும் பூநூலின் பாதையில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

இடம் :
காக்கட்டை வர்மத்துக்கு கீழே முதுகில் உள்ளது. (திவளை வர்மத்துக்கு பின்னால் முதுகில் உள்ளது)

இருப்பிடம் :
1. ‘சீர் திவளை நேர்முதுகில் பூநூல் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

2. ‘கானரிய திவளை நேர் முதுகில் பூணூல் காலம்
கண்டுபாரிரு புறமும் கருத வேண்டும்’ (வர்ம பீரங்கி-100)

3. ‘காக்கட்டை காலத்துக்கும் இரு விரலுக்கும்
இப்புறத்தில் கழுத்தில் சேர்ந்து இருக்கும் பூநூல் காலம்’ (வர்ம விளக்கம்)

4. ‘…………………………………………..முனையின் வர்மம்
முன்னெல்லு ஓட்டையின் மேல் பூநூல் காலம்’ (வர்ம சாரி-205)

5. ‘பண்பான பூநூல் காலம் ரண்டு’ (வர்ம சாரி-205)

6. ‘ஆரென்ன கைபுட்டி எல்லின் மேலே
அருகு பற்றி இடிகொண்டால்…………………..’ (வர்ம சூத்திரம்-101)

விளக்கம் :
பூநூல் முதுகில் அமைந்துள்ள இடத்தில் குறிப்பாக தோளிலிருந்து (காக்கட்டைக் காலத்திலிருந்து) சுமார் ஆறு விரலளவுக்குக் கீழ் புறமாக, மார்பு பகுதியிலுள்ள திவளை வர்மத்துக்கு நேரே மறுபுறம் அமைந்துள்ளது. பூநூல் ஒரு பக்கமாக மட்டும் போட்டுக் கொண்டாலும் பூநூல் வர்மம் இரு பக்கமும் உள்ளது.

இவ்வர்மத்தில் அடிப்பட்டால் அப்பக்க கையில் வலி, உளைச்சல் ஏற்படும். பலம் குன்றிவிடுவதோடு அடிபட்ட பக்கத்தின் கை ஒடுங்கிப் போகும் (சூம்பிப்போகும்) என்று வர்ம பீரங்கி-100 என்ற நூல் குறிப்பிடுகிறது.

Anatomy : At the point of suprascapular notch

1) Supra scapular Nerve
2) Supra Scapular Artery
3) Brachial Plexus

siddhabook. Varmam Academy