37. அமத்து வர்மம் – Amathu Varmam

வேறு பெயர்கள் :
1. அமத்து வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)

இடம் :
முலைக்கண்ணுக்கு அருகில் அமைந்துள்ளது.

இருப்பிடம் :
‘அமத்துதான் மாரிக்கும் மூன்று அங்குலம் கீழ் பக்கத்தில்
அமத்து தான்’ (வர்ம லாட சூத்திரம்-300)

நின்றதின்……………………………………………………..
நின முலைக்கண் ஓர் இறையருகில் குழிவு வர்மம்
சென்றதின் கண்ணருகு அமத்து வர்மம் (அடிவர்ம சூட்சம்)

குறிகுணம் :

அமட்டு(த்து) வர்மம் (12)
அறிவான சத்தியென்ற அமட்டு வர்மம்
அதின் குணமும் அசாத்தியமென்று அறிந்து கொள்ளு
மறிவான உடல் தளர்ந்து அதிதளர்ச்சை
மடமடவென சன்னி வரும் சுவாசம் முட்டும்
பிறிவான பதை பதைப்பாய் விழிமயங்கும்
பிரியுமடா சுழிபோலே மரித்துப் போகும்
நெறியான காலமது கடினம் காட்டும்
நிலைக்கவே சிகிட்சையில் உற்று பாரே.

அமத்து வர்மத்தின் குணம் ஏதெனில் உடல் தளர்ந்து சன்னி ஏற்பட்டு மூச்சு முட்டும். வாயிலிருந்து நுரை வெளியேறி கண்மூடும். முழு மாத்திரையில் கொண்டால் மரணம் உருவாக்கும்.

வர்மலாட சூத்திரம்-300 : ஆமை போல தோன்றும். (பிரதான குறிகுணம்) வாய் மூக்கில் பதை காணும். நினைவு கெட்டு படுக்கும். விரைவில் இளக்குமுறை செய்வது நல்லது.

siddhabook. Varmam Academy